Sunday 22 December 2019

BETHI TREATMENT - பேதி மருத்துவம்


பேதி மருத்துவம்
நாம் எவ்வளவுதான் முன் ஜாக்கிரதையாக உணவு மற்றும் பழக்கவழக்கம் கொண்டிருந்தாலும், உடலின் உள் உறுப்புகளில் அவைகளை இணைக்கக்கூடிய குழாய்களிலும் அழுக்குகள் காலப் போக்கில் படிகின்றன.
இந்த அழுக்குகள் மெலிதாகப் படர்வதால் அவை உடனே நோய்களை உண்டாக்குவதில்லை. குடலை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டோம் என்றால், இந்த அழுக்குகள் மெதுவாகப் பெருகி, உடல் பருமன், ஜீரணக் கோளாறு சர்க்கரை வியாதி,  விஷஜ்வரம், உள்ளுறுப்புக் குழாய்களில் அடைப்பு, இந்திரியங்கள் என்று சொல்லக்கூடிய கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவைகளுக்கு செயல்திறன் குன்றுதல், மூச்சிழுப்பு, உடல் வீக்கம், ரத்த சோகை, வயிற்றில் பூச்சிகள், கட்டிகள், உறக்கம் தொலைந்து போகுதல், உடல்நிறம் மற்றும் சக்தி குறைநது விடுதல் போன்ற நோய்கள் ஏற்படும்.
உடலில் தங்கும் கழிவுகள் , குடலில் நாள்பட்டு தங்கும் கழிவுகள், விஷ தன்மை உடைய டாக்சின்கள் போன்றவற்றை நீக்குவதற்கு (4) நான்கு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருத்துவம் மேற்கொள்ளலாம்.
பேதி செய்வித்தல்
பேதி மேற்கொள்ளும் நாளை தேர்ந்தெடுத்து அன்று காலை எட்டு மணிக்குள் பேதி மருந்தை உள்கொள்ளவேண்டும்.. காலை முதல் மலை வரை கழியும் சில நேரங்களில் வாந்தியும் வியர்வையும் உண்டாகும். சில நேரங்களில் அசதி இருக்கும் ஆகவே ஓய்வு கிடைக்கும் நாட்களில் பேதி மருந்து உட்கொள்ளவேண்டும்.
பேதி மருந்து உட்கொண்ட பிறகு குளிக்க கூடாது
பேதி மருந்து உட்கொண்ட முப்பது நிமிடம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் கழிய ஆரம்பிக்கும். அவரவர் உடல்நிலை பொறுத்து குறைந்தது நான்கு முதல் பதினைந்து முறை பேதியாகும். சில நேரங்களில் படபடப்பு, வயற்று வலி, குமட்டல், வியர்வை, சோர்வு ஏற்படலாம். அச்சப்பட தேவை இல்லை. மதியம் வரை பேதி ஆகும்.
ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கவேண்டும் அல்லது மிளகு ரசம் செய்து குடிக்கலாம். வழக்கம் போல் ரசத்தில் புளி சேர்க்கக்கூடாது புளிக்கு பதில் நாட்டு தக்காளி அல்லது எலும்பிச்சை புளிப்பிற்காக சேர்த்துக்கொள்ளலாம்.
மிகவும் பசியாக இருந்தால் மதியம் ஒருமணிக்கு ரசம் சாதம் உட்க்கொள்ளலாம்.
மாலை மூன்று மணிக்கு மேல் தயிர் சாதம் சாப்பிட்டு பேதியை நிறுத்திக்கொள்ளலாம்.
குடல் சுத்தமான பிறகு தான் குளிக்கவேண்டும்
குளித்த பிறகு நன்றாக குழைத்த உணவை மிளகு ரசத்துடன் கலந்து உட்கொள்ளவேண்டும்.
இரவு பசி ஏற்பட்டால் மோர்சாதம் அல்லது அரிசி கஞ்சி சாப்பிடலாம்.
இரவு ஒன்பது மணிக்குள் உறங்க செல்லவும் மறு நாள் காலை வழக்கம்போல் உணவு உட்கொள்ளலாம்
மூன்று வயதினர் முதல் என்பது வயதினர் வரை பேதி மருந்து உட்கொள்ளலாம்.
பேதி மாத்திரை சென்னை போரூரில் மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை அன்பர்களுக்கு நேரடியாக அளிக்கப்படும்.
எங்களது முகவரி எண் நான்கு, ஆர் ஈ நகர் மேற்கு, முதல் குறுக்கு தெரு, மருதர் கேசரி ஜெயின் ஹால், போரூர் குன்றத்தூர் மெயின் ரோடு, ஒப்போ மொபைல் ஷோ ரூம் ஒட்டிய சந்து, (சங்கீதா கல்யாண மண்டபம் அருகில்)
தொடர்பிற்கு அலை பேசி எண் 94441 39824



NASIYAM TREATMENT - நசியம் சிகிக்சை பற்றி ஒரு விளக்கம்


நசியம் சிகிக்சை பற்றி ஒரு விளக்கம்
உடல் சுத்தத்திற்கான வழிகள் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் குறிக்கோள்கள் உண்டு நான்கு விதமான குறிக்கோள்கள் மனிதருக்கு மிக அவசியம் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர்
உடல் சுத்தத்திற்கான வழிகள்
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் குறிக்கோள்கள் உண்டு. நான்கு விதமான குறிக்கோள்கள் மனிதருக்கு மிக அவசியம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அவை தர்மம், அர்த்தம் (பொருளீட்டல்) , காமம் மற்றும் மோக்க்ஷம். இவைகளுக்கு புருஷார்த்தங்கள் என்று பெயர். இந்த நான்கையும் பெறுவதற்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் மிகவும் தேவை. இவைகளைப் பெறுவதற்கான வழிகளை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளனர்.
சுத்தமான ரத்தினக்கல் ஒன்றை எடுத்து, சுத்தமான தண்ணீரில் சிறிது நாட்கள் போட்டு வையுங்கள். அதன் பிறகு ரத்தினக் கல்லை கையிலெடுத்து உருட்டுங்கள். மெலிதான அழுக்கு இழை ஒன்று இந்த ரத்தினக்கல் மேல் படர்ந்திருக்கும். அதனால் அது கையிலிருந்து வழுக்குவதைக் காண்பீர்கள்.
மேலுள்ள உதாரணம் மனித உடலுக்கும் பொருந்தும். நாம் எவ்வளவுதான் முன் ஜாக்கிரதையாக உணவு மற்றும் பழக்கவழக்கம் கொண்டிருந்தாலும், உடலின் உள் உறுப்புகளில் அவைகளை இணைக்கக்கூடிய குழாய்களிலும் அழுக்குகள் காலப் போக்கில் படிகின்றன.
இந்த அழுக்குகள் மெலிதாகப் படர்வதால் அவை உடனே நோய்களை உண்டாக்குவதில்லை. உடலை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டோம் என்றால், இந்த அழுக்குகள் மெதுவாகப் பெருகி, உடல் பருமன், ஜீரணக் கோளாறு சர்க்கரை வியாதி, குஷ்டம், விஷஜ்வரம், உள்ளுறுப்புக் குழாய்களில் அடைப்பு, இந்திரியங்கள் என்று சொல்லக்கூடிய கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவைகளுக்கு செயல்திறன் குன்றுதல், மூச்சிழுப்பு, உடல் வீக்கம், ரத்த சோகை, வயிற்றில் பூச்சிகள், கட்டிகள், உறக்கம் தொலைந்து போகுதல், உடல்நிறம் மற்றும் சக்தி குறைநது விடுதல் போன்ற நோய்கள் ஏற்படும்.
நல்ல சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு வருபவர்களுக்கும் கூட மேலுள்ள நோய்கள் வரக் காரணம் உணவிலுள்ள சத்தை குடலிலிருந்து எடுத்தும் செல்லும் குழாய்களில் இந்த அழுக்கு படிவதால்தான். அழுக்குகள் உணவுக்குழாயிலும் மற்ற உறுப்பகளில் படியாமலிருக்கவும், சத்துள்ள உணவை உடல் நன்கு பெறுவதற்காக, உடலை சுத்தி செய்யும் யான முறைகளில் ஒன்றை தற்போது பார்ப்போம்.
நசியம் - மூக்கில் மருந்துவிட்டு தலையிலுள்ள அழுக்குகளை நீக்குதல்
நசியம் சிகிக்சை
மூக்கின் வழியாக மருந்தைச் செலுத்தல் ' நசியம் ' எனப்படும். மூக்கு தலையின் கதவுகளாகும். மூக்கினுள் செலுத்திய மருந்து தலையினுள் பரவி கண், காது, தொண்டை ஆகிய இடங்களில் நழைந்து, தோள்களுக்கு மேலுள்ள அனைத்து நோய்களையும் நீக்க வல்லது.
தலைபாரம், வீக்கம், எரிச்சல், அரிப்பு, அதிக உமிழ்நீர், வாயில் அருவருப்பு, குரல்வளை நோய், தலைக்கிருமி, காக்காய்வலிப்பு, வாசனைகளை உணரமுடியாத நிலை, ஒற்றைத் தலைவலி, சூர்யாவர்த்தம், கண்இடுங்குதல், துடிப்பு, பார்வைபறிபோதல், கண்மூடித்திறப்பதற்கு கடினமாக இருத்தல், பல்வலி, காதுவலி, காதில் இரைச்சல், நாக்கும் மூக்கும் உலர்ந்து போதல், கழுத்து நோய், பேச்சுத்தடை, கை அசைவில்லாமல் வலியுடன் இருத்தல், ஆகிய நோய்க்களுக்கு  நசியம் நல்ல பலனைத் தரும்.
நசிய முறைப்படி தலையில் உள்ள அழுக்குகள் நன்கு நீங்கிவிட்டால் மூச்சு சீராக வருதல், தும்மல் சீராதல், நல்ல உறக்கம், சுலபமாக கண்விழித்தல், தலை, முகம், இந்த்ரியங்கள் சுத்தமாகுதல், கழுத்துககு மேலுள்ள நோய்கள் நீங்கிவிடுதல் ஆகிய பலன்கள் உண்டாகும்.